யான் ஈன்ற அடையாளம் கல்வியல்லோ!!! — தீக்கோளில் கனன்றெழுந்து தண்மையின் மார்பிடுக்கில் ஒழிந்துகொண்டு இற்றைவரை பாரென்று இயம்புதென்றால் இச்சால் உரையென்பேன் காரணங்கள் பத்து உந்தன் இதயம் கசிந்துருக காதல் என்பாய் மறத்தமிழன் ஆயிற்றே -வீரமென்பாய் குறிஞ்சிக்கண் நின்று இன்றும் குற்றுயிராய் போராடும் தோழனல்லோ-உழைப்புமென்பாய் பசிக்காய் ஒருவேளை உண்டி தேடி அன்பிற்கேங்கி ஈருயிர் ஓருடலாய் காதல் தேடி பகைமை பின்வாங்கி புறஞ்செல்ல வீரம் தேடி நின் கிளைகள் வளர்கவென உழைப்பும் தேடி தேடல் ஒன்றே பிரார்த்தமானது பாரில் உயிர் பூத்ததென்றால் தேடல் ஒன்றே அதன் காலகால காதல்…

அடையாளம்
அடையாளம்
Vivek Vinushanth Christopher

Vivek Vinushanth Christopher

Software Engineer @WSO2 | Graduated from Department of Computer Science & Engineering, UoM